உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செம்பாக்கத்தில் பூங்காக்கள் பராமரிப்பில் மெத்தனம்

செம்பாக்கத்தில் பூங்காக்கள் பராமரிப்பில் மெத்தனம்

செம்பாக்கம், தாம்பரத்தின் அடையாளமாக திகழும், முத்துரங்கம் மற்றும் காந்தி பூங்காக்கள் சீரழிந்து, துர்நாற்றம் வீசுகிறது. மூன்றாவது மண்டலம், செம்பாக்கத்தில் ராதேஷ் ஷியாம் அவென்யூ, ஸ்டெல்லஸ் அவென்யூ பாரதியார், அப்துல்கலாம், ஆலவட்டம்மன் கோவில், கவுசிக் அவென்யூ, சீனிவாசன் நகர், அன்னை அஞ்சுகம் ஆகிய பூங்காக்கள், இரண்டு ஆண்டுகளாக பராமரிப்பின்றி உள்ளன. விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்துள்ளன. மின் விளக்குகள் எரிவதில்லை. செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி, விஷ ஜந்துகளின் புகலிடமாகியுள்ளன. இதனால், நடைபயிற்சி செய்வோர் பயந்து செல்கின்றனர்.இதுகுறித்து, மண்டல அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும், பூங்காக்களை சீரமைத்து பராமரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மூன்றாவது மண்டலத்தில் உள்ள பூங்காக்களை சீரமைத்து, பராமரிக்க வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ