மேலும் செய்திகள்
ஊர்க்காவல் படை வீரரை தாக்கிய வாலிபர் கைது
02-Mar-2025
வண்ணாரப்பேட்டை,பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயகுமார், 52. இவர், பழைய வண்ணாரப்பேட்டை, பெரிய மார்க்கெட் பகுதியில் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தபோது, சட்டைப்பையில் இருந்த அவரது மொபைல் போனை, மர்ம நபர் திருடி தப்பினார். விஜயகுமார் பகுதிவாசிகள் உதவியுடன், அந்த இளைஞரை மடக்கி பிடித்து வண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாகுமார் நோனி, 19, என்பதும், பகுதிவாசிகள் துரத்தும்போது மொபைல் போனை தெருவோரத்தில் வீசிவிட்டு ஓடியதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டனர்.
02-Mar-2025