உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டாக்டர் வீட்டில் 66 சவரன் திருடிய பணிப்பெண் கைது

டாக்டர் வீட்டில் 66 சவரன் திருடிய பணிப்பெண் கைது

அண்ணா நகர், அண்ணா நகர், சாந்தி காலனி 14வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் கோகுல், 35. இவரது மனைவி பத்மஸ்ரீ, 30; டாக்டர். நேற்று முன்தினம் பத்மஸ்ரீ, உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு செல்ல, வீட்டில் வைத்திருந்த நகைகளை எடுத்துள்ளார்.அதில், 66 சவரன் நகைகள் மாயமானது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர், வீட்டில் இரு மாதங்களுக்கு முன்புவரை பணிபுரிந்த பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாக, அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார்.விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வினோதினி, 32, என்பவர், பத்மஸ்ரீ வீட்டில் வேலை செய்து, சில மாதங்களுக்கு முன் வேலையில் இருந்து நின்றுள்ளார்.வினோதினியை, நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரித்ததில், சிறுக சிறுக நகைகளை திருடியதாக ஒப்புக்கொண்டார். திருடிய நகைகளில் 20 சவரனை அடகு வைத்தும், 20 சவரன் நகைகளை விற்றும், பணத்தை செலவு செய்துள்ளார். அவரது வீட்டில் இருந்த, 20 சவரன் நகைகளை, போலீசார் பறிமுதல் செய்து, வினோதினியை நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ