ஆண் சடலம் ஏரியில் மீட்பு
பள்ளிக்கரணை, -மேடவாக்கம் அடுத்த பள்ளிக்கரணை, நாராயணபுரம் ஏரியில், 40 வயது ஆண் சடலம் மிதப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. பள்ளிக்கரணை போலீசார், தீயணைப்பு துறை உதவியுடன், நேற்று உடலை மீட்டனர்.இறந்த நபரின் சட்டை பையில், சென்னை, தி.நகரிலிருந்து பேருந்து வாயிலாக பள்ளிக்கரணை வந்ததற்கான பயணச் சீட்டு இருந்தது. தவிர, அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.ஏரியில் குளித்தபோது மூழ்கி இறந்தாரா, யாரேனும் கொலை செய்து ஏரியில் சடலத்தை வீசினரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.