மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்ற இருவர் சிக்கினர்
30-Dec-2024
புதுவண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை, கிராஸ் சாலை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில், யோகநந்தன் என்பவர், விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார்.இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு பணியில் இருந்த போது, அங்கு வந்த மர்ம நபர், 100 ரூபாய் கொடுத்து, 150 ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில் தருமாறு கேட்டு தகராறு செய்தார்.மேலும், யோகநந்தனை அவதுாறாக பேசி, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார்.இதுகுறித்து, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில், யோகநந்தன் அளித்த புகாரின்படி, நேற்று போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில், புதுவண்ணாரப்பேட்டை, தனபால் நகரை சேர்ந்த மதன், 46, என்பவர், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.
30-Dec-2024