உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  2 ஆம்னி பேருந்துகள் வாங்கி பணம் தராமல் ஏமாற்றியவர் கைது

 2 ஆம்னி பேருந்துகள் வாங்கி பணம் தராமல் ஏமாற்றியவர் கைது

கோயம்பேடு: இரண்டு ஆம்னி பேருந்துகள் வாங்கி, பணம் தராமல் ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டார். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது தாஜுதீன், 38. இவர், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 'டிராவல்ஸ்' நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2024ல் இவருக்கு சொந்தமான இரண்டு ஆம்னி பேருந்துகளை, சாலிகிராமத்தைச் சேர்ந்த சுபராஜன், 31 என்பவர் விலைக்கு வாங்கி கொள்வதாக கூறியுள்ளார். இரண்டு ஆம்னி பேருந்துகளுக்கு 38.50 லட்சம் ரூபாய் விலை பேசி, முன்பணமாக 6.50 லட்சம் கொடுத்து, பேருந்துகளையும் சுபராஜன் எடுத்து சென்றார். ஆனால், மீதி தொகையை தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில், முகமது தாஜுதீனின் பேருந்து கரூரில் இருப்பது தெரிய வர, கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கரூர் போலீசார் விசாரித்து ஒரு பேருந்தை மீட்டு கொடுத்தனர். தலைமறைவாக உள்ள சுபராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், தலைமறைவாக இருந்த சுபராஜனை நேற்று முன்தினம் கைது செய்தனர். மற்றொரு ஆம்னி பேருந்தை, சுபராஜன் அவரது நண்பருடன் சேர்ந்து, இயக்கி வருவதும் தெரிய வந்தது. பேருந்தை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ