உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மெட்ரோ ஊழியரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது

 மெட்ரோ ஊழியரிடம் மொபைல் போன் பறித்தவர் கைது

ஐ.சி.எப்.: ஒடிசா மாநிலம், கஞ்சம் பகுதியை சேர்ந்தவர் நிகாமானந்தா ராவத், 32. இவர், பூந்தமல்லியில் தங்கி, போரூர் மெட்ரோ ரயில் பணியில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். இவர், கடந்த 8ம் தேதி மதியம், ரயிலில் ஒடிசாவில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையம் வந்தார். பின், அங்கிருந்து போரூர் செல்வதற்காக, 'ஓலா' செயலி வாயிலாக ஸ்கூட்டர் புக் செய்துள்ளார். அங்கிருந்து அவரை ஸ்கூட்டரில் ஏற்றி வந்த ஓட்டுநர், ஐ.சி.எப்., வழியாக சென்றார். அப்போது, ஓட்டுநர் தனது மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆனதாக கூறி, 'மேப்' பார்க்க, நிகாமானந்தாவின் மொபைல் போனை வாங்கியுள்ளார். பின், ரயில்வே அருங்காட்சியகம் அருகில், ஓட்டுநர் தனது ஹெல்மெட் கீழே விழுந்ததாக கூறி, ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளார். வாகனத்தில் இருந்து இறங்கி, ஹேல்மெட்டை நிகாமானந்தா எடுக்க முயன்ற போது, மொபைல் போனுடன் ஓட்டுநர் தப்பினார். இதுகுறித்து ஐ.சி.எப்., போலீசார் விசாரித்து, பட்டாளம், கே.பி., பார்க் பகுதியை சேர்ந்த உதயகுமார், 38, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்