உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரண்டு வீடுகளில் 22 சவரன் நகை திருடியவர் கைது

இரண்டு வீடுகளில் 22 சவரன் நகை திருடியவர் கைது

சென்னை: பட்டப்பகலில், அமிராமபுரத்தில் பூட்டி கிடந்த இரண்டு வீடுகளில், 22 சவரன் நகைகளை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அபிராமபுரம் வள்ளீஸ்வரன் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜா, 40. இவரின் தாய் உஷா, ஆக.,7ம் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று, மாலையில் திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு, பீரோ உடைக்கப்பட்டு, 20 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் திருடு போனது. அதேபோல் கடந்த 7 ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன், 38, வீட்டின் கதவு, பீரோவை உடைத்து, 2 சவரன் நகை மற்றும் 15,000 ரூபாய் திருடு போனது. இரு சம்பவங்கள் குறித்தும் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிந்து, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, அபிராமபுரத்தைச் சேர்ந்த ராஜா, 40, என்பவரை கைது செய்தனர். திருட்டு நகைகளை உருக்கி வைத்திருந்தார். அவரிடம் இருந்து, 19.5 சவரன் தங்கம் மற்றும் 1 லட்சம் ரூபாயை போலீசார் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !