உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தண்டவாளத்தை கடந்தவர் ரயில் மோதி பலி

தண்டவாளத்தை கடந்தவர் ரயில் மோதி பலி

திருவொற்றியூர்: திருவொற்றியூர், மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர், 52. கூலித் தொழிலாளி. இவரது மனைவி, மகன் ஆகியோர் பாண்டிச்சேரியில் வசித்து வருகின்றனர். நேற்று வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட அலெக்சாண்டர், திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது எதிரே வந்த விரைவு ரயில் மோதி துாக்கி வீசப்பட்டார். இதில், பலத்த காயமடைந்த அலெக்சாண்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !