உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடபழனியில் ரூ.418 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் வணிக வளாகத்துடன் அமைக்கிறது மெட்ரோ ரயில் நிறுவனம்

வடபழனியில் ரூ.418 கோடியில் ஒருங்கிணைந்த பஸ் முனையம் வணிக வளாகத்துடன் அமைக்கிறது மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை, வடபழனியில், 481.3 கோடி ரூபாயில், 12 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய, ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அமைக்க உள்ளது.சென்னை வடபழனி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 158 பஸ்கள், 1,158 சேவைகளாக இயக்கப்படுகின்றன. ஆற்காடு சாலையில், 6.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பஸ் நிலையத்தில், 12 மாடிகளுடன் வணிக வளாங்களுடன் கூடிய, ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை, 481.3 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழக தொழில்துறை மேம்பாட்டு கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த வளர்ச்சி திட்டம், அதிக தேவை கொண்ட நகர்ப்புற மையத்தை உலகத்தரம் வாய்ந்த, பல்நோக்கு வசதியாக மாற்றும் வகையில் மேற்கொள்ளப்பட உள்ளது..சீரான பஸ் இயக்கம், 2,801 சதுர மீட்டர் திறந்தவெளி ஒதுக்கீடு, 2,304 சதுர மீட்டர் பூங்கா மற்றும் தோட்டமும் அமைகிறது.மொத்த கட்டுமான பரப்பளவு, 1,06,762 சதுர மீட்டர்கள். இரண்டு அடித்தளங்களில், 1,475க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், 214 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி அமையும். தரை தளத்தில் அமைக்கப்படும் நவீன பேருந்து நிலையத்தில், மொத்தம் ஏழு நுழைவு பகுதிகள் அமைக்கப்படும். முதல் தளத்தில் இருந்து 10வது தளங்கள் வரை அலுவலக இடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பெருநிறுவன அலுவலகங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்கள் அமைய உள்ளன.மேலும், 11, 12 வது தளங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த தளங்களாக அமையும். பயணியர், பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு பிரத்யேக உணவு மையம் மற்றும் சில உணவகங்கள் ஐந்தாவது தளத்தில் அமைக்கப்பட உள்ளன.சில்லறை விற்பனை நிலையங்கள் தரை தளத்தில் அமைந்திருக்கும். மாடியில் பசுமையான தோட்டம் மற்றும் சோலார் மின்உற்பத்திக்கான பேனல்கள் அமைக்கப்படும் என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கண்ணன்
ஜூன் 12, 2025 11:11

கட்டிமுடித்துப் பயன்பாட்டிற்கு வரும்வரை பேருந்துகள் எங்கே நிறுத்தப்படும்?


Mani
ஜூன் 12, 2025 09:59

மிக தேவையான ஒன்று. சரிவர செய்தல் முக்கியம். இப்போது வடபழனி டு போரூர் ரோடு தயாராக உள்ளதால், பி.டீ ராஜன் சாலையை இரு வழியாக மாற்றிவிடலாம். அனேகமாக அணைத்து பேரூந்துகலும் பழய வழியில் தான் செல்கின்றன. ஆகவே பி.டீ ராஜன் சாலையை இரு வழியாக உடனே மாற்ற ஏற்பாடு செய்யவும். அதனால் பல வாகனங்கள் பெட்ரோல் சேமிக்க முடியும். நேரமும் மிச்சம். அசோக் பில்லர் ட்ராபிசிக்கும் குறையும்.


சமீபத்திய செய்தி