உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை துண்டிப்புக்கு கட்டணமின்றி இணைப்பு தர எம்.எல்.ஏ., கோரிக்கை

சாலை துண்டிப்புக்கு கட்டணமின்றி இணைப்பு தர எம்.எல்.ஏ., கோரிக்கை

சென்னை, சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், நேற்றுமுன்தினம், சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பேசியதாவது:சோழிங்கநல்லுார் தொகுதியில் பல இடங்களில், குடிநீர், கழிவுநீர் திட்ட பணி முடிந்து, வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணி துவங்கியது.வரைபடம் அனுமதி பெறும்போதே, சாலை துண்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வீடுகளுக்கு இணைப்பு வழங்க சேர்த்துதான், ஏற்கனவே குடிநீர், கழிவுநீர் திட்ட ஒப்பந்தம் கோரப்படுகிறது.இந்நிலையில், இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும்போது, மீண்டும் சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால், மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சாலை துண்டிப்பு கட்டணம் இல்லாமல் குடிநீர், கழிவுநீர் இணைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் நேரு, ''டிபாசிட் தொகை அதிகம் கேட்க வேண்டாம்; இணைப்பு கொடுங்கள் என, சென்னை குடிநீர் வாரியத்திற்கு வலியுறுத்தி உள்ளோம். சாலை துண்டிப்பு கட்டணம் இல்லாமல் இணைப்பு வழங்க வேண்டும் என்ற எம்.எல்.ஏ.,வின் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை