உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மோகன்ராஜ் நினைவு கால்பந்து கேப்ரியல் பள்ளி முதலிடம்

மோகன்ராஜ் நினைவு கால்பந்து கேப்ரியல் பள்ளி முதலிடம்

சென்னை, டான்பாஸ்கோ இளைஞர் மையம் சார்பில், மோகன்ராஜ் நினைவு ரோலிங் கோப்பைக்கான 'யு - 16' கால்பந்து போட்டி, பிராட்வேயில் நேற்று முன்தினம் நடந்தது.சென்னைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில் பிராட்வே கேப்ரியல் அணி, 3 - 1 என்ற கணக்கில், வியாசர்பாடி டான்பாஸ்கோ இளைஞர் மையத்தை தோற்கடித்தது.மற்றொரு போட்டியில், எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளி, 1 - 0 ன்ற கணக்கில் பிராட்வே டான்பாஸ்கோ இளைஞர் மையத்தை வீழ்த்தியது.விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், செயின்ட் கேப்ரியல் பள்ளி அணி, 1 - 0 என்ற கணக்கில், எழும்பூர் டான்பாஸ்கோ பள்ளியை தோற்கடித்து முதலிடத்தை பிடித்தது. போட்டியில், சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை