உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மிரண்டு ஓடிய மாடால் விபத்து மகன் கண்ணெதிரே தாய் பலி

மிரண்டு ஓடிய மாடால் விபத்து மகன் கண்ணெதிரே தாய் பலி

குன்றத்துார், குன்றத்துாரை அடுத்த நந்தம்பாக்கம், எஸ்.கே.எஸ்., அவென்யூவை சேர்ந்தவர் முருகன், 56. அவரது மனைவி சிங்காரி, 52. நேற்று மாலை, சிங்காரி தன் மகன் சிவராமனுடன் குன்றத்துார் சென்றார். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.குன்றத்துாரை அடுத்த கலெட்டிபேட்டை, அம்பேத்கர் சிலை அருகே சென்றபோது, எதிரே வந்த குதிரை வண்டியில் இருந்து, அதிக சத்தம் வந்ததால், சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று, மிரண்டு ஓடி, இருசக்கர வாகனம் மீது மோதியது.இதில், தாயும், மகனும் துாக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த சிங்காரி, மகன் கண்ணெதிரே பரிதாபமாக இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை