உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரு துறைகளின் போட்டியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

இரு துறைகளின் போட்டியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

செங்குன்றம், டிச. 16---செங்குன்றம், புறவழிச்சாலை சந்திப்பு முதல், வடகரை ஊராட்சி மன்ற அலுவலகம் வரையிலான, 1 கி.மீ., துார மாதவரம் நெடுஞ்சாலை, மிக மோசமாக சேதமடைந்துள்ளது. மேலும், சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, நாளுக்கு நாள் சேதம் அதிகரிக்கிறது.குறிப்பாக, வடகரை அரசு ஆதி திராவிடர் நலத்துறை மேல்நிலைப்பள்ளி, அரசு தொழிற்பயிற்சி நிலையம், மாணவியர் விடுதி அருகே உள்ள சாலை பள்ளங்களில் தேங்கிய கழிவுநீரை, மாணவர்கள் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.இது குறித்து, நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'நாங்கள் சேதமடைந்த சாலையை அவ்வப்போது சீரமைக்கிறோம். ஆனால், குடிநீர் வாரிய குழாயில் கசியும் தண்ணீர் தேங்கி சாலை சேதமடைகிறது' என்றனர்.குடிநீர் வாரியத்தினர் கூறுகையில், 'பெயரளவில் மேற்கொள்ளப்படும் சாலை சீரமைப்பால் தான், கனரக வாகனங்களின் அழுத்தம் தாங்காமல், நாங்கள் அமைத்துள்ள குடிநீர் குழாய் சேதமடைகிறது' என்றனர்.இரு துறைகளின் போட்டியால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை