உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அகற்றிய இடத்தில் மீண்டும் டிஜிட்டல் பேனர் மாநகராட்சி ஆதரவால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

அகற்றிய இடத்தில் மீண்டும் டிஜிட்டல் பேனர் மாநகராட்சி ஆதரவால் வாகன ஓட்டிகள் அதிருப்தி

சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், அண்ணா மேம்பாலம், அண்ணாசாலை - சேமியர்ஸ் சாலை சந்திப்பு ஆகிய இரண்டு இடங்களில், எல்.இ.டி., ஒளித்திரை விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளன.மாலையில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை, எல்.இ.டி., ஒளித்திரையின் வெளிச்சம் கூச செய்கிறது. ஓட்டுனர்களின் கவனத்தை சிதறடிப்பதால், வாகன விபத்து ஏற்படுகிறது. அதனால், விளம்பர பலகைகளை அகற்ற, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.வாகன ஓட்டிகள் கூறியதாவது:அண்ணாசாலை வழியாக கிண்டி நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், செனடாப் சாலை, சேமியர்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. இவ்வழியில் பல இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக சேமியர்ஸ் சாலையில், எல்.இ.டி., ஒளித்திரை விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு வண்ணங்களில் விளம்பரங்கள் மாறி மாறி வருவதால், வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதோடு, கண்களை கூச செய்கிறது. இதுபோன்ற விளம்பர பதாகைக்கு, மாநகராட்சி அனுமதி அளிக்ககூடாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சிக்கு வருமானம் ஈட்டும் விதமாக, விபத்து ஏதும் நிகழாமல் இருக்கும் இடங்களில் தனியார் நிறுவனங்கள் விளம்பரம் பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.இதை பயன்படுத்தி, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் எல்.இ.டி., விளம்பர பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு வருகின்றன.எல்.ஆர்.சுவாமி கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை அகற்றினோம். இந்நிலையில் அதே இடத்தில் மீண்டும் பேனர் வைக்க, அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அதனால் புகார் வந்தாலும் எங்களால் ஒன்றும் செய்ய இயலாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை