உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நாப்கின் வழங்கும் இயந்திரம் கூடுதல் கமிஷனர் ராதிகா திறப்பு

 நாப்கின் வழங்கும் இயந்திரம் கூடுதல் கமிஷனர் ராதிகா திறப்பு

சென்னை: பெண் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் நலன் கருதி, அவர்கள் பணியாற்றும் இடங்களில் குறைந்த விலையில், சானிட்டரி நாப்கின் வினியோகிக்கும் இயந்திரங்கள், காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டன. அதன்படி, மகளிர் காவல் நிலையங்கள், ஆயுதப்படை 1 - 2 வளாகங்கள், கமிஷனர் அலுவலகம், சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு அலுவலகம் உட்பட, 43 காவல் பணியிடங்களில், குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின் வினியோகிக்கும் இயந்திர ங்கள் நிறுவப்பட்டன. இந்த இயந்திரத்தின் செயல்பாட்டை, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், கூடுதல் கமிஷனர் ராதிகா, நேற்று துவக்கி வைத்தார். அப்போது, ''இத்திட்டத்தின் வாயிலாக, 5,900 பெண் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் பயனடைவர். ஐந்து ரூபாய் காயின் செலுத்தினால், ஒரு சானிட்டரி நாப்கி னை, இந்த இயந்திரத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ