தேசிய சீனியர் ஹாக்கி போட்டி டில்லி, மே.வங்கம் கோல் மழை
சென்னை,தமிழ்நாடு ஹாக்கி யூனிட் சார்பில், 14வது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள், எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில், நேற்று முன்தினம் துவங்கியது.இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், தமிழகம், டில்லி, கேரளா உள்ளிட்ட 31 அணிகள் பங்கேற்றுள்ளன. அணிகள் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன.நேற்று முன்தினம் 'சி' பிரிவில் பங்கேற்ற தமிழக அணி துவக்க ஆட்டத்தில், 7 - 0 என்ற கோல் கணக்கில் ஆந்திராவை தோற்கடித்தது.நேற்று நடந்த ஆட்டத்தில், டில்லி மற்றும் ஜம்மு - காஷ்மீர் அணிகள் மோதின. விறுவிறுப்பான ஆட்டத்தில், 6 - 0 என்ற கோல் கணக்கில் டில்லி அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில், மே.வங்க அணி 10 - 0 என்ற கணக்கில் அசாம் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து, சண்டிகர் மற்றும் கர்நாடகா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்தது. அதில், கர்நாடகா அணி, 5 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.