மேலும் செய்திகள்
டிவிஷன் கிரிக்கெட் தெற்கு ரயில்வே வெற்றி
30-Sep-2025
சென்னை: சென்னையில் நடந்த அகில இந்திய ரயில்வே வாலிபால் தொடரில், சென்னை ஐ.சி.எப்., அணி 'சாம்பியன்' பட்டம் வென்று அசத்தியுள்ளது. ஐ.சி.எப்., விளையாட்டு சங்கம் சார்பில், 46வது இந்திய ரயில்வே மகளிர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையின் ஐ.சி.எப்., மைதானத்தில் நடந்தது. நாடு முழுதும் இருந்து, 10 சிறந்த அணிகள், 'லீக் கம் நாக் அவுட்' முறையில் மோதின. லீக் சுற்று போட்டிகளுக்கு பின், ஐ.சி.எப்., அணி உட்பட நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதியில் வெற்றி பெற்று, இறுதி போட்டியில், கிழக்கு ரயில்வே அணியும் ஐ.சி.எப்., அணியும் மோதின. ஐ.சி.எப் அணி 26 - 24, 25 - 18, 25 - 21 என்ற புள்ளிக்கணக்கில் கிழக்கு ரயில்வே அணியை வீழ்த்தி, 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது. மூன்றாவது இடத்தை, தெற்கு ரயில்வே அணி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஐ.சி.எப்., பொது மேலாளர் ஸ்ரீசுப்புராவ் கோப்பையை வழங் கினார்.
30-Sep-2025