உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உணவகத்தை சூறையாடிய ஓசி பிரியாணி ரவுடிகள் கைது

உணவகத்தை சூறையாடிய ஓசி பிரியாணி ரவுடிகள் கைது

தேனாம்பேட்டை,சென்னை, தேனாம்பேட்டை, நல்லான் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 40. இவர், ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் துரித உணவகம் நடத்தி வருகிறார்.கடந்த 14ம் தேதி, ஆட்டோவில் வந்த இரு மர்ம நபர்கள், இவரது உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு விட்டு, பணம் கொடுக்காமல் மிரட்டிவிட்டுச் சென்றனர்.இதுகுறித்து, சதீஷ்குமார் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.இதை அறிந்த அந்த நபர்கள், ஆத்திரத்தில் மீண்டும் வந்து கடையை சூறையாடி விட்டு, கல்லாப்பெட்டியில் இருந்த 27,000 ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.இதுகுறித்து மீண்டும், சதீஷ்குமார் புகார் அளித்த புகாரை விசாரித்த போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட வேளச்சேரி, ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த பாட்டில்மணி, 40, பெசன்ட் நகரைச் சேர்ந்த ரபீக், 34, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். இதில், பாட்டில்மணி மீது கொலை வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை