உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தப்பிய குரங்குகள் ஒன்று பிடிபட்டது

தப்பிய குரங்குகள் ஒன்று பிடிபட்டது

தாம்பரம், வண்டலுார் பூங்காவில் இருந்து தப்பிச்சென்ற இரண்டு அனுமன் குரங்குகளில் ஒன்று, மயக்க ஊசி செலுத்தி, நேற்று பிடிக்கப்பட்டது.வண்டலுார் பூங்காவில் இருந்து, இரண்டு அனுமன் குரங்குகள், தப்பிச்சென்றன. அவற்றை தேடி பிடிக்கும் பணி, தீவிரமாக நடந்து வந்தது. இரண்டு குரங்குகளும், ஓட்டேரி விரிவு குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்தன.இது, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.இந்த நிலையில், நேற்று மதியம், மயக்க ஊசி செலுத்தி, பெண் குரங்கை, பூங்கா ஊழியர்கள் பிடித்தனர். மற்றொரு குரங்கான ஆண் குரங்கை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ