மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த, லட்சுமிபுரம் பால சண்முகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா, 56; இவர், வீட்டின் எதிரே புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்தார்.நேற்று மாலை, அங்கிருந்த மின் மோட்டார் ஒயரை துண்டிக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில், அப்துல்லா துாக்கி வீசப்பட்டு இறந்தார்.