உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழனிசாமி கூட்டம் பிரதமர் வருகையால் ரத்து

பழனிசாமி கூட்டம் பிரதமர் வருகையால் ரத்து

சென்னை, எம்.ஜி.ஆர்., பிறந்த நாளையொட்டி, வரும் 19, 20, 21, 27, 28 ஆகிய தேதிகளில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், கட்சி அமைப்பு ரீதியாக செயல்படும் பிற மாநிலங்களிலும், பொதுக்கூட்டம் நடத்தப்படும் என, அ.தி.மு.க., தலைமை அறிவித்தது.சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், இன்று நடக்க இருந்த பொதுக்கூட்டத்தில், பொதுச் செயலர் பழனிசாமி பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.இன்று மாலை, சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில், 'கேலோ இந்தியா' இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க உள்ளார். அதையொட்டி, சென்னை முழுதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.இதன் காரணமாக, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், இன்று நடக்க இருந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இக்கூட்டம் வரும் 31ம் தேதி நடக்கும். அன்று, பழனிசாமி பேசுவார் என, கட்சி தலைமை அறிவித்துஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை