உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மும்பை புறப்பட்ட விமானத்தில் டயர் வெடித்ததால் பயணியர் பீதி

மும்பை புறப்பட்ட விமானத்தில் டயர் வெடித்ததால் பயணியர் பீதி

சென்னை:சென்னை விமானம் நிலையத்தில் இருந்து மும்பைக்கு, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' பயணியர் விமானம், நேற்று மாலை 5:00 மணிக்கு புறப்பட்டது. இதில், 158 பயணியர், விமான ஊழியர்கள் எட்டு பேர் என 166 பேர் இருந்தனர்.இந்த விமானம், ஓடுபாதையில் ஓட துவங்கியபோது, விமானத்தின் பின்பக்க டயர் ஒன்று திடீரென வெடித்து சிதறியது.இதனால் ஓடுபாதையில், குலுங்கி குலுங்கி விமான ஓடியது, பயணியர் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியது.சுதாரித்த விமானி, ஓடுபாதையில் விமானத்தை அவசரமாக நிறுத்தி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.இதையடுத்து விமான நிலைய ஊழியர்கள், இழுவை வண்டியுடன் ஓடுபாதைக்கு சென்றனர். இழுவை வண்டியுடன் விமானத்தை இணைத்து, பழுதடைந்த விமானங்கள் நிற்கும் பகுதிக்கு கொண்டு சென்றனர். பயணியர் அனைவரும், விமானத்தின் உள்ளே இருந்தனர்.விமான பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைந்து வந்து, வேறு டயரை உடனடியாக மாற்றினர். இதையடுத்து விமானம், பயணியருடன் இரண்டு மணி நேரம் தாமதமாக இரவு 7:00 மணிக்கு, மும்பைக்கு புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி