மேலும் செய்திகள்
அறிவிப்பு பலகையில் விஷமிகள் அட்டகாசம்
26-Sep-2024
சென்னை, சென்னையில் சென்ட்ரல் பல்லவன் சாலை, அண்ணா நகர், அடையாறு, தாம்பரம் உள்ளிட்ட பணிமனைகளிலிருந்து, பல்வேறு இடங்களுக்கு ஆயிரக்கணக்கான பேருந்துகள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.தற்போது பெரும்பாலான வழித்தட பேருந்துகளில், வழித்தடம் குறித்த தகவல் உள்ள 'டிஜிட்டல்' பெயர் பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முறையான பராமரிப்பு இல்லாததால், பெரும்பாலான பேருந்துகளில் இந்த டிஜிட்டல் பெயர் பலகைகள் பழுதடைந்து உள்ளன.அவற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளாமல், மெத்தன போக்கை கடைபிடித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற பேருந்துகளில், 'பெயின்ட்'டால் எழுதப்பட்ட வழித்தட எண் குறித்த பலகைகள் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால், ஓட்டுனர்களும் வேறு வழியின்றி, அப்படியே பேருந்துகளை இயக்கி வருகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் பயணியர், டிஜிட்டல் பலகை இல்லாத பேருந்துகள் வரும் போது, ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம், அப்பேருந்து எங்கு செல்கிறது எனக் கேட்டு, அதன் பின் பயணிக்கும் நிலை உள்ளது.சில நேரங்களில், பேருந்து எங்கு செல்கிறது என்பதை கேட்டு ஏறுவதற்குள், பேருந்து புறப்பட்டு விடுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாநகர பேருந்துகளில் பழுதடைந்துள்ள டிஜிட்டல் பெயர் பலகைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26-Sep-2024