உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துரைப்பாக்கம் காவல் நிலையம் இடமாற்றம் செய்ய திட்டம்

துரைப்பாக்கம் காவல் நிலையம் இடமாற்றம் செய்ய திட்டம்

துரைப்பாக்கம், துரைப்பாக்கத்தில் உள்ள காவல் நிலையம், சாலை மட்டத்தில் இருந்து, 3 அடி தாழ்வாக உள்ளதால், ஒவ்வொரு பருவமழைக்கும் வெள்ள பாதிப்பு ஏற்படும். அதே இடத்தில் காவல் நிலையம் கட்ட, பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது.நிலம் நீளமாக உள்ளதுடன், வடிவமைப்பில் மாற்றம் செய்ய வேண்டி இருந்ததால், நிர்வாக ரீதியாக காலதாமதம் ஏற்பட்டது.இந்நிலையில், துரைப்பாக்கம் காவல் நிலையம் கட்ட, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 3.70 கோடி ரூபாயில் அதே இடத்தில் காவல் நிலையம் கட்டப்பட உள்ளது.சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து காவல் பிரிவு மற்றும் தரமணி காவல் உதவி கமிஷனர் அலுவலகம் என, மூன்றடுக்கு கட்டடமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. பருவமழை முடிந்த பின், 2025 ஜன., மாதம் பணி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இப்பணிக்காக, துரைப்பாக்கம் காவல் நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய இடம் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை