உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  நெல்லை பெண்ணின் 5 சவரன் செயினை மீட்டு கொடுத்த போலீஸ்

 நெல்லை பெண்ணின் 5 சவரன் செயினை மீட்டு கொடுத்த போலீஸ்

வண்ணாரப்பேட்டை: நெல்லையைச் சேர்ந்த பெண், சென்னையில் தவறவிட்ட தாலி செயினை போலீசார் மீட்டு கொடுத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நஸ்ரின், 28. இவர், உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னை வந்தார். பின், உறவினர்களுடன் சேர்ந்து கடந்த 27ம் தேதி மாலை வண்ணாரப்பேட்டை, எம்.சி., சாலையில் உள்ள துணிக்கடையில் துணிகள் வாங்கிக் கொண்டு, அங்கிருந்து ஆட்டோவில் ஏறி பழைய வண்ணாரப்பேட்டை, பாண்டியன் தியேட்டர் அருகில் இறங்கினார். அப்போது, நஸ்ரினின் ஐந்தரை சவரன் தாலி செயின் காணாமல் போனது. இது குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் துணிக்கடையில் விசாரணை மேற்கொண்டு, அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கடைக்கு வெளியே சாலையில் கிடந்த தாலிச்செயினை, ஒரு பெண் எடுத்து செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில், சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தொடர்ச்சியாக ஆய்வு செய்து, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண்ணை அடையாளம் கண்டு, அவரிடமிருந்த ஐந்தரை சவரன் தாலிச்செயினை மீட்டு, உரிமையாளர் நஸ்ரினிடம் நேற்று ஒப்படைத்தனர். செயினை மீட்டு தந்த போலீசாருக்கு நஸ்ரின் மற்றும் குடும்பத்தார் நன்றியை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி