| ADDED : ஜன 02, 2026 05:50 AM
சென்னை: ஆர்.கே., மடம் சாலையில் ப ள்ளம் விழுந்ததால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. மயிலாப்பூர், ஆர்.கே., மடம் சாலை - தெற்கு மாட வீதி சந்திப்பு அருகே சாலையில், நேற்று காலை, திடீரென மெகா பள்ளம் விழுந்தது. தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போக்குவரத்து போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்தனர். குடிநீர் வாரிய அதிகாரிகள் வந்து ஆய்வு மேற் கொண்டதில், கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, சாலையில் பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது. விரிசல் மற்றும் சாலை பள்ளத்தை சீரமைக்கும் பணியில், வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.