மொபைல் போனை ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு
வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டையில், சாலையில் தவறவிட்ட மொபைல் போனை கண்டெடுத்து ஒப்படைத்த சிறுவர்களை, போலீசார் பாராட்டினர். வண்ணாரப்பேட்டை, ராமதாஸ் நகரில் நேற்று, பழனி, பிரதீஷ், நித்திஷ், சந்துரு ஆகிய நான்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே பைக்கில் சென்றவர், மொபைல் போனை தவறவிட்டுள்ளார். அதை கண்டெடுத்த சிறுவர்கள், அங்குள்ள 53வது வட்ட த.மு.மு.க., அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அக்கட்சி நிர்வாகிகளுடன் சிறுவர்கள், வண்ணாரப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின், மொபைல் போனை தவறவிட்ட உரிமையாளர் ராகேஷை வரவழைத்தனர். சிறுவர்கள் முன்னிலையில், ராகேஷிடம் அவரது மொபைல் போனை போலீசார் ஒப்படைத்தனர். சிறுவர்களின் நேர்மையை போலீசார் பாராட்டியதோடு, அவர்களுக்கு விளையாட்டு பொருட்கள் வாங்கி கொடுத்து ஊக்குவித்தனர்.