மேலும் செய்திகள்
சில வரிகள்
21-Aug-2025
வானகரம்; வானகரம், ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 54; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும், ராஜீவ் நகர் குடியிருப்பு நலச்சங்கத்தில் பிரதிநிதியாக உள்ளார். அதே நகரில் வசித்து வரும் விக்னேஷ் என்பவர், 'டிரான்ஸ்போர்ட்' நிறுவனம் நடத்தி வருகிறார். இவர், தன் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட வாகனங்களை, ராஜீவ் நகர் சாலையின் இருபுறமும் நிறுத்துவது வழக்கம். இதனால் அங்கு, போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய ஏழுமலையை, இம்மாதம் 10ம் தேதி, உருட்டுகட்டை, செருப்பு, உடைந்த பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த ஏழுமலை புகாரை விசாரித்த வானகரம் போலீசார், விக்னேஷை கைது செய்தனர். விசாரணையில், வளசரவாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற கல்லுாரி பேராசிரியருக்கு, ராஜீவ் நகரில் சொந்தமான காலி இடத்தில், விக்னேஷ் வேலி அமைத்து ஆக்கிரமித்ததும், அதை தட்டி கேட்ட வெங்கடேஷையும் இரும்பு ராடால் மிரட்டியதும் தெரியவந்தது. அதுகுறித்து விசாரிக்கின்றனர்.
21-Aug-2025