உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

தனியார் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

செங்குன்றம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், பி.டி.மூர்த்தி நகர், பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு சென்ற வெங்கடேசன், மனைவியிடம் தகராறு செய்துவிட்டு, படுக்கை அறைக்கு சென்றவர், புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை