உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பேருந்து இயக்க தாமதம் பூந்தமல்லியில் போராட்டம்

 பேருந்து இயக்க தாமதம் பூந்தமல்லியில் போராட்டம்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் இருந்து பட்டாபிராம் பகுதிக்கு, தடம் எண் '54சி' அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்து, நேற்று மாலை, நீண்ட நேரமாகியும் பேருந்து நிலையம் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணியர், பூந்தமல்லி நிலையத்தினுள் அரசு பேருந்து முன் அமர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தமல்லி போலீசார் வந்து சமரச பேச்சு நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். பயணியர் கூறுகையில், 'பூந்தமல்லி - பட்டாபிராம் செல்லும் பேருந்தை பயன்படுத்தி, பாரிவாக்கம், கோலப்பன்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்கிறோம். இந்த வழித்தடத்தில், இரு அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் நிலையில், அவையும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ