மாதவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ரேடியன்ஸ் ரியாலிட்டி அறிவிப்பு
சென்னை,சென்னை மாதவரத்தில், 'ரேடியன்ஸ் ரியாலிட்டி' நிறுவனம் சார்பில், 'ரேடியன்ஸ் சாலிடேர்' என்ற பெயரில், நவீன வசதிகளுடன், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. ரேடியன்ஸ் ரியாலிட்டி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு: மெட்ரோ ரயில் மற்றும் புதிய சாலை வசதிகள் காரணமாக, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இப்பகுதியில் வீடு வாங்கினால், பல்வேறு பகுதிகளுக்கு எளிதாக சென்றுவர, போக்குவரத்து வசதிகள் அதிகரித்துள்ளன. இங்கு, 5.37 ஏக்கர் நிலத்தில், 'ரேடியன்ஸ் சாலிடேர்' என்ற பெயரில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட உள்ளது. இந்த குடியிருப்பில், 2, 3, 4 படுக்கை அறை என்ற மூன்று பிரிவுகளில், 660 வீடுகள் விற்கப்பட உள்ளன. இங்கு, 658 முதல் 2,127 சதுர அடி பரப்பளவில் வீடுகள் கிடைக்கும். இந்த வளாகத்தில், 19,000 சதுர அடியில், கிளப் ஹவுஸ், அரை ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளம், நவீன உடற்பயிற்சி மையம், குழந்தைகளுக்கான சிறப்பு விளையாட்டு வசதிகள் என, 30க்கும் மேற்பட்ட சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, 850 மீட்டர் தொலைவில் இத்திட்டம் அமைந்துள்ளதால், போக்குவரத்து எளிதாகும். ஐ.டி., பூங்கா, பள்ளிகள், மருத்துவமனைகள் அனைத்தும் அருகிலேயே உள்ளன. இதில், உங்கள் கனவு இல்லத்தை பதிவு செய்ய, 91710 11111 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.