உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா பல்கலை பதிவாளர் சிண்டிகேட் தீர்மானம் நிராகரிப்பு

அண்ணா பல்கலை பதிவாளர் சிண்டிகேட் தீர்மானம் நிராகரிப்பு

சென்னை,அண்ணா பல்கலையின் பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணி நியமனம் தொடர்பான தீர்மானத்தை, சிண்டிகேட் கூட்டம் நிராகரித்தது. அண்ணா பல்கலையில் இன்னும் முழுநேர பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள் நியமிக்கப்படாமல் உள்ளன. தற்போதைய நிலையில், குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி பேராசிரியர் பிரகாஷ், பல்கலை பதிவாளராக கூடுதல் பொறுப்பில் பணியாற்றுகிறார். தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக, பேராசிரியர் சக்திவேல் கூடுதல் பொறுப்பில் உள்ளார்.இந்த இருவரையும், முழுநேர பணியில் நியமிக்க, பல்கலை நிர்வாகம் சார்பில் மூன்று முறை முயற்சிக்கப்பட்டும், பல்வேறு எதிர்ப்புகளால் தள்ளி போயுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் பல்கலை சிண்டிகேட் கூட்டம், துணை வேந்தர் வேல்ராஜ் தலைமையில், உயர் கல்வி துறை செயலர் கார்த்திக் முன்னிலையில் நடந்தது. அதில், பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பதவிகளுக்கு, தற்போது உள்ளவர்களையே நியமிக்க வேண்டும் என்ற பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது.அதற்கு துணை வேந்தர் தவிர, மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இரண்டு பதவிகளுக்கும், உரிய விதிகளின் படி விண்ணப்பம் பெற்று, பல்கலை சார்பில் பாரபட்சமற்ற கமிட்டி அமைத்து, தகுதியான ஆட்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும், அதுவரை சிண்டிகேட்டில் இந்த பிரச்னை பேசப்படக் கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.மேலும், ஏற்கனவே குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் விண்ணப்பங்களை பரிசீலிக்கக் கூடாது என்றும், சிண்டிகேட் உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை