உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விதிமீறல் பேனர்கள் அகற்றம்

விதிமீறல் பேனர்கள் அகற்றம்

ஆவடி:ஆவடி மாநகராட்சி பகுதியில், உரிமம் பெறாமல் 25 ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.அவர்கள் கண்டுகொள்ளாததால், விளம்பர பேனர்கள், அவற்றை தாங்கி நிற்கும் இரும்பு தட்டிகள் அகற்றும் பணி, மூன்று நாட்களாக நடந்து வருகிறது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அகற்றப்பட்ட ராட்சத இரும்புகள் ஏலம் விடப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். விதிமீறி பேனர்கள் வைக்கும் நிறுவனங்கள் மீது வழக்கு தொடர்ந்தால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ