ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றம்
முத்தியால்பேட்டை, முத்தியால்பேட்டை, சேவியர் தெரு, பிடாரியம்மன் கோவில் தெருவை ஆக்கிரமித்து, 100க்கும் மேற்பட்டோர் குடிசைகள் அமைத்து, 30 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். இதுகுறித்து வந்த புகாரையடுத்து, ராயபுரம் மண்டல அதிகாரி பரீத்தா பானு உள்ளிட்ட அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு, குடிசைகளை, ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:இங்கு வசிக்கும் மக்களுக்கு, யானைகவுனி நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையும், கருணை தொகையாக, குடும்பத்தினருக்கு தலா 25,000 ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, வீடுகளை காலி செய்யக்கோரி, நோட்டீஸ் வழங்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அனைத்து ஆக்கிரமிப்பு குடிசைகளும் அகற்றப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.