சீரமைக்கப்பட்ட ஆடுதொட்டி பிப்ரவரியில் திறப்பு
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், 45 கோடி ரூபாய் செலவில், புளியந்தோப்பு ஆடுதொட்டி சீரமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்து அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இங்கு, ஆட்டு இறைச்சிக்காக, 40 கடைகளும், மாடு இறைச்சிக்காக, 18 கடைகளும் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையும் 1,400 சதுர அடியில் இருக்கும். இந்த பகுதியில் குவியும் இறைச்சி கழிவுகளை சுத்திகரிக்க, சிறப்பு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. - பிரியா, மேயர், சென்னை மாநகராட்சி.