உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடிகால் மேன் ஹோல் சீரமைக்க கோரிக்கை

வடிகால் மேன் ஹோல் சீரமைக்க கோரிக்கை

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம், புழதிவாக்கம், ஆயிரம் விளக்கு தெருவில் பாதாள சாக்கடை திட்டம் உள்ளது. இச்சாலை அமைத்தபோது, பாதாள சாக்கடை, 'மேன்-ஹோல்' மூடிகள் இருந்த இடத்தை விட்டு சாலை அமைத்துள்ளனர்.இதனால், அச்சாலையில் 'மேன்-ஹோல்' மூடிகள் உள்ள பகுதி பள்ளமாக காட்சியளிக்கிறது. பகலில் நான்கு சக்கர வாகனத்தின் பின்னால் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளம் தெரியாமல் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர்.இரவில் நிலைமை மேலும் மோசமாகிறது. சைக்கிளில் வரும் பள்ளி மாணவர்களும் விபத்துகளை சந்திக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சுந்தரம், புழுதிவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி