உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி வாகனங்களை பராமரிக்க தனி பணிமனை அமைக்க கோரிக்கை

மாநகராட்சி வாகனங்களை பராமரிக்க தனி பணிமனை அமைக்க கோரிக்கை

தாம்பரம், தாம்பரம் மாநகராட்சிக்கு சொந்தமான வாகனங்களை பராமரிக்க, தனியாக பெட்ரோல் பங்க் மற்றும் பணிமனை அமைக்க வேண்டும் என்று, கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாம்பரம் மாநகராட்சி, 70 வார்டுகள், ஐந்து மண்டலங்களை கொண்டுள்ளன. இம்மாநகராட்சியில், குப்பை அகற்றும் பணியில்,360 லோடு ஆட்டோக்கள், 60 டிராக்டர்கள்,ஒன்பது காம்பாக்டர் வாகனங்கள் உள்ளன. இதைதவிர, அதிகாரிகளுக்கான வாகனங்கள், ஜே.சி.பி., நாய் மற்றும் மாடு பிடிக்கும் வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன.இந்த வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்புதல், பழுது பார்த்தல் ஆகிய பணிகளுக்காக, மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் செலவாகிறது. அதேநேரத்தில், முறையாக பழுது சரிசெய்யாததால், சில மாதங்களிலேயே மீண்டும் வாகனங்கள் பழுதாவதும் தொடர்கிறது. இதனால், மக்கள் வரிப்பணம் தான் வீணாகிறது.அதனால், தாம்பரம் மாநகராட்சியில், வாகனங்களை பராமரிக்க தனியாக பெட்ரோல் பங்க், பணிமனை அமைத்தால், மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் சேமிப்பாகும். வாகனங்களையும் உடனுக்குடன் சரிசெய்ய ஏதுவாக இருக்கும். உயர் அதிகாரிகள் ஆலோசித்து, தனியாக பெட்ரோல் பங்க் மற்றும் பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ