உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நண்டு பிடிக்க போய் நீரில் சிக்கிய தம்பதி மீட்பு

நண்டு பிடிக்க போய் நீரில் சிக்கிய தம்பதி மீட்பு

சாஸ்திரிநகர்,:விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதிகேசவன், 48. இவர், குடும்பத்துடன் சென்னையில் தங்கி, கட்டுமான பணி செய்து வருகிறார். இவர், வேலை இல்லாத நாட்களில், அடையாறு முகத்துவாரம் சென்று நண்டு, மீன் பிடிப்பது வழக்கம்.நேற்றுமுன்தினம் மாலை, மனைவி, மகனுடன் நண்டு பிடிக்க சென்றார். ஆதிகேசவன், மார்பளவு ஆழத்தில் சென்று மீன்பிடித்தபோது, நீரில் சிக்கினார். காப்பாற்ற முயன்ற மனைவி, மகனும் நீரில் சிக்கி திணறினர்.மீனவர்கள் அளித்த தகவலின்படி, திருவான்மியூர் தீயணைப்பு படையினர் நேற்றிரவு 8:00 மணிக்கு மூன்று பேரையும் மீட்டனர். பின், மழைக்காலத்தில் இந்த பகுதிக்கு வரக்கூடாது என, எச்சரித்து அனுப்பினர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை