உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மில்லிங் செய்யாமல் அமைக்கப்பட்ட சாலையால் புழுதிவாக்கத்தில் அவதி

மில்லிங் செய்யாமல் அமைக்கப்பட்ட சாலையால் புழுதிவாக்கத்தில் அவதி

புழுதிவாக்கம்: புழுதிவாக்கத்தில், நல்ல நிலையில் இருந்த பழையை சாலையில், 'மில்லிங்' செய்யாமல் அமைக்கப்பட்டுள்ள சாலையால் பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பெருங்குடி மண்டலம், வார்டு 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்குள்ள ஈஸ்வரன் கோவில் தெரு முக்கியமான சாலையாகும். இதன் இருபுறமும் வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ளன. இந்த சாலை, கடந்த மூன்று தினங்களுக்கு முன், 200 மீட்டர் நீளத்திற்கு, பழைய சாலையில் 'மில்லிங்' செய்யாமல், அதன் மேலேயே சாலை அமைத்துள்ளனர் இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் கூறியதாவது: குறிப்பிட்ட சாலை, கடந்தாண்டு மட்டும் இருமுறை அமைக்கப்பட்டுள்ள நிலையில், சில தினங்களுக்கு முன், மூன்றாவது முறையாக அமைக்கப்பட்டுள்ளது. புழுதிவாக்கத்தின் பல தெருக்களில், சாலை அமைக்கப்படாமல் விடுபட்டுள்ள நிலையில், நல்ல நிலையில் உள்ள இந்த சாலையில், ஒட்டுப்பணி செய்யாமல், குறிப்பிட்ட நீளத்திற்கு பழைய சாலையை சுரண்டி எடுக்காமலும், மழைநீர் வடிகாலின் வடிகட்டிகளை மூடி, மேடும் பள்ளமாக அவசரகதியில் சாலை அமைத்துள்ளனர். இதனால், சாலையின் மட்டம் உயர்ந்துள்ளதோடு, வரிசையாக நான்கு வடிகட்டிகள் மூடப்பட்டுள்ளதால், சாலையில் சேகரமாகும் மழைநீர், வீடுகளினுள் புகும் நிலை உள்ளது. எனவே, வடிகட்டிகளின் அடைப்புகளை அகற்றி, 'மில்லிங்' செய்யாமல் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை