உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.15 லட்சம் ஹவாலா பாரிமுனையில் பறிமுதல்

ரூ.15 லட்சம் ஹவாலா பாரிமுனையில் பறிமுதல்

பாரிமுனை:சென்னை, பாரிமுனை, என்.எஸ்.சி.போஸ் சாலையில், போலீசார் ரோந்து பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்திற்டமாக பைக்கில் வந்த வாலிபரிடம் விசாரித்தனர்.அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தால், அவரது பையை சோதனையிட்டதில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரிந்தது. யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணகி வாலிபரிடம் விசாரித்தார். இதில், புரசைவாக்கம், கந்தப்பா தெருவைச் சேர்ந்த முகமது முஸ்தக், 38, என்பதும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரிந்தது. அவரிடமிருந்த 15 லட்ச ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, ஹவாலா பணமா என விசாரிக்கின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ