புதுப்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
அயனாவரம், வில்லிவாக்கம், பொன்னா கிணறு பகுதியைச் சேர்ந்தவர் அருண், 28. இவர், அயனாவரத்தைச் சேர்ந்த கவிதா, 24 என்பவரை காதலித்து, கடந்தாண்டு ஜூன் 7ம் தேதி திருமணம் செய்துள்ளார்.கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 13ம் தேதி, அயனாவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு கவிதா வந்துள்ளார். நேற்று காலை, கவிதாவுக்கும் அவரது தங்கைக்கும் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கவிதா, அறைக்குள் சென்று, மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிகிறது. அயனாவரம் போலீசார், ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.