மேலும் செய்திகள்
'சம்ப்'பில் தவறி விழுந்து திருநின்றவூர் நபர் பலி
10-Feb-2025
திருநின்றவூர், திருநின்றவூர், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சேஷாத்ரி, 40; தனியார் நிறுவன ஊழியர். இவர், மனைவி மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம், அவரது தாய் கல்யாணி உடல்நிலை சரியில்லாமல், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், சேஷாத்ரி மற்றும் அவரது மனைவியும் மருத்துவமனையில் தங்கியுள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை பக்கத்து வீட்டில் வசிப்போர், வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதாக சேஷாத்ரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, டி.வி.எஸ்., ஜூபிடர் ஸ்கூட்டர், 2 ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் எல்.இ.டி., 'டிவி' திருடு போனது தெரிந்தது. புகாரின் படி, திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Feb-2025