உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  த.வெ.க.,வில் இணைந்தார் செங்கோட்டையன்!

 த.வெ.க.,வில் இணைந்தார் செங்கோட்டையன்!

சென்னை: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இன்று இணைந்தார்.

ஆலோசனை

அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்குமாறு குரல் கொடுத்து, காலக்கெடு விதித்தார், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இதையடுத்து, அவரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை செங்கோட்டையன் சந்தித்ததால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கடும் கோபமடைந்து, கட்சியில் இருந்தே செங்கோட்டையனை நீக்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ucs35dul&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, நேற்று காலை தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன், சென்னை போயஸ் கார்டனில் உள்ள த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சில நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.அதன்பிறகு, ஆதவ் அர்ஜுனா காரில் இருவரும் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள த.வெ.க., தலைவர் விஜய் வீட்டுக்கு சென்றனர். அங்கு விஜயுடன் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.நிர்வாகிகள் பட்டியல் விஜயை சந்தித்தபோது, தன்னுடன் த.வெ.க.,வில் இணையவுள்ள அ.தி.மு.க., நிர்வாகிகள் பட்டியலையும், விஜயிடம் ஒப்படைத்தார். அவர்களுக்கும் விரைவில் பதவி வழங்குவதாக விஜய் உறுதியளித்துள்ளார்.இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10:00 மணிக்கு, கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.இந்த நிகழ்ச்சியில், செங்கோட்டையன் கலந்து கொண்டு, த.வெ.க.,வில் அதிகாரபூர்வமாக இணைந்தார்.

தி.மு.க., - பா.ஜ., கட்சிகளின் கடைசி கட்ட முயற்சி தோல்வி

கோவையில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த செங்கோட்டையனை, தி.மு.க., மூத்த அமைச்சர்கள் இருவர் தொடர்பு கொண்டு, 'தி.மு.க.,வுக்கு வாருங்கள்; அமைப்பு செயலர், மாவட்டச் செயலர் பதவி தர, முதல்வர் ஸ்டாலின் தயாராக இருக்கிறார்' என கூறியுள்ளனர். அவர்களிடம், 'த.வெ.க.,வில் இணையும் முடிவில் உறுதியாக இருக்கிறேன். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்' என, திட்டவட்டமாக செங்கோட்டையன் கூறி விட்டார். நேற்று எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதற்காக, சபாநாயகர் அப்பாவு அறைக்கு செங்கோட்டையன் வந்தபோது, அவரை அமைச்சர் சேகர்பாபு சந்தித்தார். முதல்வர் தரப்பில் சொல்லப்பட்ட முக்கிய தகவலை கூறினார். அதற்கு செங்கோட்டையன் மவுனத்தை மட்டுமே பதிலாக கூறினார். இதற்கிடையே, டில்லியில் முகாமிட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும், மொபைல் போனில் செங்கோட்டையனை தொடர்பு கொண்டு, 'அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்; டில்லி வாருங்கள். 'பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்; பா.ஜ.,வில் சேருங்கள்' என, கூறியிருக்கிறார். அதற்கும் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்து விட்டார்.

எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா

அ.தி.மு.க.,வில் அமைப்பு செயலராகவும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலராகவும் இருந்த செங்கோட்டையன், அக்கட்சி சார்பாக ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். தற்போது, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால், நேற்று தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதற்காக, நேற்று காலை சென்னை தலைமை செயலகத்துக்கு வந்த செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அந்த கடிதத்தை அப்பாவு பெற்றுக் கொண்டார். எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வந்தபோது, செங்கோட்டையன் காரில் அ.தி.மு.க., கொடி கட்டப்பட்டு இருந்தது. சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய பின், அவரது காரில் இருந்த அ.தி.மு.க., கொடி அகற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

s vinayak
நவ 27, 2025 12:47

பண்ருட்டி ராமசந்திரனுக்கு ஏற்பட்ட நிலைதான் வரும்.


Sun
நவ 27, 2025 10:27

எந்த ஒரு மாற்றமும் பெரிதாக ஏற்படப் போவதில்லை! புரட்சித் தலைவர் , புரட்சி தலைவி வாழ்க என்றவர் இளைய தளபதி விஜய் வாழ்க! என மாற்றிக் கொள்ளப் போகிறார்! அவ்வளவுதான்.


GNANAVEL
நவ 27, 2025 10:14

பெரும் மன்னர்களின் ஆளுமையின் கீழ் உலவி வந்த அஸ்வமேத யாக குதிரை...


Maruthu Pandi
நவ 27, 2025 10:06

செங்கோட்டையன் தலைவனாக போற்றியவர்? அன்றே இவர்களை பற்றி கணித்து ஆசை முகம் என்கிற படதில் பாடியிருப்பார். "நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன்பேர் மனிதனல்ல ...நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல .. உள்ளத்தில் இருப்பதை உதட்டினில் வைப்பவன் எவனோ அவனே மனிதன். ஓரார் வியர்வையில் உடலை வளர்ப்பவன் உலகத்தின் கோழைகள் தலைவன் .. "


Haja Kuthubdeen
நவ 27, 2025 09:50

தொலையட்டும். புரட்சிதலைவர் சீட்டு கொடுத்ததால் எம் எல் ஏ.... ஒரு முகவரி கிடைத்ததும் தொடர்ந்து சீட் கிடைத்ததே தவிற உங்க தனி செல்வாக்கிற்கு அல்ல. இது செங்கிஸ்க்கு மட்டுமல்ல எடப்பாடி..பண்ணீர்..வேலுமணி..டிடிவி..அம்மா வரை பொறுந்தும்.வளர்த்து உயர்ந்த இடத்தை அடைய அஇஅதிமுக தொண்டனே காரணம்.அந்த கட்சிக்கு துரோகம் செய்து போவும் எவனும் நியாயம் தர்மம் பத்தி பேச யோக்கியதையே இல்லை.


நிவேதா
நவ 27, 2025 09:28

புது தற்குறி


vivek
நவ 27, 2025 09:39

நீ புது திராவிட சொம்பா


Venu
நவ 27, 2025 08:48

What a waste. After serving with MGR and Amma ,mr S has taken a very wrong decision of joining Vijay with lust for power His efforts to unite ADMk would have given him all credits from ADMK cadre. But now he will be forgotten soon Very wrong decision Mr S. whom I have all respects for his matured political past…..


bharathi
நவ 27, 2025 08:34

vijay has no vision on the country progress i am sure he will be managed by the anti nationals group and hence he cant control if he is elected it would be a darken state. as far as sengottaiyan he had no knowledge in terms of administration being only a loyal person to his party.


naranam
நவ 27, 2025 07:47

என்ன ஒரு வேஸ்ட் இவர்! ஒரு தேசியக் கண்ணோட்டம் இல்லாத, கேடு கெட்ட தன் தலைவன் என்று கூறும் விஜய்யுடன் கூட்டு சேரும் இவருக்கு இனிமேல் என்ன மரியாதை இருக்கப் போகிறது? இவர் தன் நெற்றியில் இடும் விபூதியை இனிமேல் அழித்து விடுவாரா? ஹிந்துக்களின் கடவுளர்களையும் தமிழ் பெண்களையும் மிகவும் கேவலமாகப் பேசிய தன் தலைவனாக ஏற்றுக் கொண்ட விஜயின் கட்சியில் இவர் சேருவதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். விரைவில் இவர் செல்லாக் காசாகி விடுவார் என்றே தோன்றுகிறது! கேவலம்!


Senthoora
நவ 27, 2025 07:17

என்னமோ ஜனாதிபதி பதவி கிடைத்தமாதிரி செய்தி. தேர்தலுக்குப்பின் ஏண் இந்த கட்சியில் சேர்ந்தேன் என்று நினைக்கவேண்டி வரும்,


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி