உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  குட்கா விற்ற கடைக்கு சீல்

 குட்கா விற்ற கடைக்கு சீல்

மடிப்பாக்கம்: புழுதிவாக்கம், பாலாஜி நகர் 24வது தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஆம்ரோஸ், 52. இவர், அரசால் தடை செய்யப்பட்ட 'குட்கா' புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் சோதனையில், குட்கா பொருட்கள் சிக்கியது. பின், போலீசார் அளித்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பெட்டி கடையை பூட்டி 'சீல்' வைத்தனர். குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடை உரிமையாளர் ஆம்ரோஸிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை