மேலும் செய்திகள்
தீயணைப்பு அலுவலக சாலை சீரமைக்க நடவடிக்கை தேவை
09-Sep-2025
ஆலந்துார், ஆலந்துார் நீதிமன்ற வளாகத்தில், செடி, கொடிகள் சூழ்ந்துள்ளதால், அது பாம்புகள் புகலிடமாக மாறியுள்ளது. இந்நிலையில், சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை, நேற்று நீதிமன்றத்திற்கு வந்த சிலர் பார்த்துள்ளனர். இதையடுத்து, நீதிமன்ற ஊழியர்கள் கொடுத்த புகாரின்படி, தீயணைப்பு படை வீரர்கள் அஜய், 27, மந்திரகுமார், 25, ஆகியோ ர், சுற்றி வளைத்து சாரை பாம்பை பிடித்தனர். அதை பையில் அடைத்து, கிண்டி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கச் சென்றனர். அங்கு பாம்பை பையில் இருந்து எடுக்க முயன்றபோது, இருவரையும் பாம்பு கடித்துள்ளது. இதையடுத்து, அவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.
09-Sep-2025