உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இவ்வளவு லட்சமா!: மெட்ரோவில் மே மாதம் 84.21 லட்சம் பேர் பயணம்

இவ்வளவு லட்சமா!: மெட்ரோவில் மே மாதம் 84.21 லட்சம் பேர் பயணம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரம் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்து வருகின்றனர்.கடந்த மே மாதத்தில், மெட்ரோ ரயில்களில் 84 லட்சத்து 21 ஆயிரத்து 72 பேர் பயணம் செய்துள்ளனர். இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, 3 லட்சத்து 33 ஆயிரத்து 360 பேர் அதிகமாகும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மே மாதத்தில் க்யூ.ஆர்., குறியீடு டிக்கெட்டில் 36 லட்சத்து 97 ஆயிரத்து 773 பேர், பயண அட்டைகளில் 32 லட்சத்து 10,776 பேர், டோக்கன்களை பயன்படுத்தி 52,055 பேர் பயணித்துள்ளனர்.அதேபோல், குழு டிக்கெட்டில் 5,307 பேரும், தேசிய பொது இயக்க அட்டையில் 14 லட்சத்து 55 ஆயிரத்து 161 பேரும், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக, மே 10ல் 3 லட்சத்து 3,109 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S. Narayanan
ஜூன் 01, 2024 19:54

மெட்ரோ இன்றைக்கு நம் அவசிய தேவைகளில் ஒன்று என்பதை யாரும் மறுக்க முடியாது.அதனால் மற்ற வழி தடங்களிலும் மெட்ரோ விரைவில் வந்தால் அரசின் வருமானம் அதிகரிக்கும். அதே போல் மக்கள் எதிர் பார்க்கும் எண்ணம் நிறைவேறும்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ