உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலிகிராமத்தில் 7 மாதமாக நீடித்த கழிவுநீர் கலப்பு பிரச்னைக்கு தீர்வு

சாலிகிராமத்தில் 7 மாதமாக நீடித்த கழிவுநீர் கலப்பு பிரச்னைக்கு தீர்வு

சாலிகிராமம், சாலிகிராமத்தில் ஏழு மாதங்களாக, குடிநீரில் கழிவுநீர் கலந்து வரும் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது.கோடம்பாக்கம் மண்டலம், 129வது வார்டு சாலி கிராமத்தில், அண்ணாமலை காலனி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை முதல், குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், பகுதிமக்கள் குடிநீருக்காக கிணறு, தனியார் லாரி மற்றும் 'கேன்' குடிநீரை நாடும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்த புகாரையடுத்து குடிநீர் வாரிய அதிகாரிகள், குடிநீரில் கழிவுநீர் கலப்பதை கண்டுபிடிக்க, பள்ளங்கள் தோண்டி சோதனை செய்தனர்.ஆனால், இந்த முயற்சியில் தீர்வு கிடைக்கவில்லை. அதன் பின், மழையால் இப்பணிகள் தடைபட்டன. தற்போது, 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் பள்ளம் தோண்டி சோதனை செய்யப்பட்டது. இதில், அபுசாலி தெரு மற்றும் அண்ணாமலை காலனி சந்திப்பில், குடிநீரில் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, குடிநீர் வாரிய ஊழியர்கள் அப்பகுதியில் பள்ளம் தோண்டி, குழாயை மாற்றி அமைத்தனர். இதனால், ஏழு மாத குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி