உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சில வரி செய்திகள்

சில வரி செய்திகள்

கத்திவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் - எண்ணுார்: எண்ணுார், அன்னை சிவகாமி நகர், எர்ணாவூர் ஆகிய மூன்று பகுதிகளை இணைக்கும் வகையில், கைவிடப்பட்ட எண்ணுார் அனல்மின் நிலையம் அருகே, கத்திவாக்கத்தில் மூன்று முனை மேம்பாலம் உள்ளது. பாலத்தை ஒட்டியுள்ள அணுகு சாலையில் புதிதாக அமைக்க, 'மில்லிங்' செய்துள்ளனர். இதனால், மாநகர பேருந்துகள், மேம்பாலத்தின் மேல் உள்ள நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதியைச் சேர்ந்தோர், அணுகு சாலை பணியை விரைந்து முடித்து, மேம்பாலம் கீழ் மாநகர பேருந்துகள் நிற்க வேண்டும் என, கத்திவாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வந்து, 10 நாட்களுக்குள் சாலை அமைப்பதாக கூறியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை