மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி
01-Mar-2025
பெசன்ட் நகர், சென்னை மாநகராட்சி மற்றும் உர்பேசர் சுமித் இணைந்து, பெசன்ட் நகர், கடற்கரையை நேற்று சுத்தம் செய்தன. இதில், 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.மொத்தம், 950 கிலோ குப்பை சேகரிக்கப்பட்டது. இதில், 190 கிலோவுக்கு மேல் குப்பை சேகரித்த ஜெயின் கலை கல்லுாரிக்கு, முதல் பரிசாக 5,000 ரூபாய் வழங்கப்பட்டது.இரண்டாம் பரிசாக 165 கிலோ சேகரித்த சென்னை பல்கலை வணிகவியல் துறைக்கு, 3,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக கோஜன் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ் அண்டு டெக்னாலஜி நிறுவனத்திற்கு, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
01-Mar-2025